தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப் வருகையையொட்டி சில பேருந்து சேவைகளில் மாற்றம்

1 mins read
7b7882f1-c578-4484-97c8-d21eb1fc7315
பேருந்து சேவை எண்களான 24, 27, 53, 151, 195 ஆகியவற்றின் சேவைகளில் சில மாற்றங்கள் இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நான்கு நாடுகளுக்கு 11 நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் 87 வயது போப் பிரான்சிஸ், செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூரில் இருப்பார்.

அவரது வருகையையொட்டி சில சாலைகள் மூடப்படுகின்றன. அதனால் சில பேருந்து சேவைகள் சில பேருந்து நிலையங்களில் செப்டம்பர் 11, 12ஆம் தேதிகளில் நிற்க மாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து சேவை எண்களான 24, 27, 53, 151, 195 ஆகியவற்றின் சேவைகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்து சேவை எண்கள் 24, 27, 53 ஆகியவை சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2க்கு அடுத்துள்ள ஏர்போர்ட் பொலிவார்ட் நிறுத்தத்தில் நிற்காது. டவர் டிரான்சிட் சேவை எண் 858ம் இந்த நிலையத்தில் நிற்காது.

செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை முதல் இரவு 8 மணி வரை பேருந்து எண் 151 கென்ட் ரிட்ஜ் கிரசென்ட்டின் 8 பேருந்து நிறுத்தங்களில் நிற்காது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடப்பதால் இந்த நடவடிக்கை.

பேருந்து சேவை மாற்றங்கள் குறித்த மேல் விவரங்களை எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்