தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிக்குறைப்பு தொடர்பாக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் மேல்முறையீடு நிராகரிப்பு

2 mins read
093bf975-9ed0-459d-a0f2-b190a2ad3316
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1, 2, 3, 4 ஆகியவற்றில் உள்ள இரண்டு ஓடுபாதைகள், விமானங்களுக்கான வழித்தளங்கள், விமானங்கள் நிறுத்துமிடங்கள் ஆகிய சொத்துகள் விமான நிலையத்தின் கட்டமைப்பு என்றும் அவை தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் அல்ல என்றும்  நீதிபதி சூ ஹான் டெக்  கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்துகளைப் பராமரிக்க செலவு செய்யப்பட்ட $270 மில்லியன் தொகையை ஒட்டுமொத்த வருமானத்திலிருந்து கழித்து, வரிகுறைப்புக்கு அதைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் மேல்முறையீடு செய்திருந்தது.

ஆனால் இந்த மேல்முறையீட்டை நீதிபதி சூ ஹான் டெக் நிராகரித்துவிட்டார்.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1, 2, 3, 4 ஆகியவற்றில் உள்ள இரண்டு ஓடுபாதைகள், விமானங்களுக்கான வழித்தடங்கள், விமான நிறுத்துமிடங்கள் ஆகிய சொத்துகள் விமான நிலையத்தின் கட்டமைப்பு என்றும் அவை தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் அல்ல என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக வருமான வரித்துறையின் மறுஆய்வுக் குழு எடுத்த முடிவு நியாயமற்றது என்றும் அது சட்டரீதியாகத் தவறு செய்துவிட்டது என்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் கூறிய கருத்தை நீதிபதி சூ ஏற்க மறுத்தார்.

இந்த சொத்துகளின் பயன்பாடுகள் குறித்து சாங்கி விமான நிலையக் குழுமத்துக்கும் வருமான வரித்துறைக்கு இடையே இணக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், அவை வருமான வரிச் சட்டத்துக்கு உட்பட்டவை என்று சாங்கி விமான நிலையக் குழுமம் வாதிட்டது.

ஆனால், சாங்கி விமான நிலையக் குழுமம் குறிப்பிட்ட இச்சொத்துகள் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் அல்ல என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளைப் பராமரிக்க ஏற்படும் செலவுகளுக்கு வரிகுறைப்பு கோரலாம்.

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் மேல்முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய சொத்துகளை தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளாக வகைப்படுத்தலாம் என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தில் வழக்கறிஞர் திரு டான் கே கெங் வாதிட்டார்.

அவை விமானங்கள் கடந்து செலன்வதற்கும் விமானங்களை நிறுத்திவைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் இடங்கள் அல்ல என்று அவர் கூறினார்.

விமானங்களை வழிசெலுத்தும் கருவிகளாகவும், விமானங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் சாதனங்களாகவும் அவை செயல்படுவதாக திரு டான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விமானங்கள் கட்டுப்பாட்டு இழந்து சறுக்காமல் இருக்க அவற்றுக்கு ஆதரவு வழங்கவும், விமானம் மீது மின்சாரம் பாயாமல் இருக்கவும் அவை உதவுவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் திரு டானின் வாதத்தை நீதிபதி சூ ஏற்க மறுத்தார்.

அந்தச் சொத்துகள் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் அல்ல என்று அவர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளாக அவற்றை வகைப்படுத்துவதைவிட அவை விமான நிலையத்தின் கட்டமைப்பின் ஒரு பகுதி என்று கூறுவதுதான் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்