மீண்டும் மகுடம் சூடியது சாங்கி விமான நிலையம்

1 mins read
8f5a16c2-5b92-43e8-9fe2-889c0e9349a9
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம். படம்: சாவ் பாவ் -

உலகின் ஆகச் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் பெற்றுள்ளது.

ஆகச் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை சாங்கி விமான நிலையம் பெற்றிருப்பது இது 12வது முறை.

2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை முதலிடம் பிடித்த சாங்கி விமான நிலையம், கொவிட்-19 காலகட்டமான 2021, 2022 ஆண்டுகளில் முதலிடத்தைத் தவறவிட்டது.

லண்டனைச் சேர்ந்த 'ஸ்கைடிரேக்ஸ்' ஆய்வு நிறுவனம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கியது.

ஆசியாவின் ஆகச் சிறந்த விமான நிலையம், உலகின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்ட விமான நிலையம், சிறந்த உணவகங்களைக் கொண்ட விமான நிலையம் ஆகிய விருதுகளையும் சாங்கி விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தில் கத்தாரின் ஹமது அனைத்துலக விமான நிலையம் வந்தது. மூன்றாவது இடம் ஜப்பானின் தோக்கியோ அனைத்துலக விமான நிலையத்திற்குக் கிடைத்தது.