சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், ஜனவரி 28ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 23ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3ல் உள்ள பயணிகளுக்கான பகுதியில் இருக்கும் கடையில் $480 மதிப்பிலான பொருள் ஒன்று திருடப்பட்டதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் பொருளை 25 வயது இந்திய நாட்டவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றதை கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த ஆடவர் பிறகு அடையாளம் காணப்பட்டார்.
அதற்குள் அந்த ஆடவர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சில நாள்கள் கழித்து அவர் சாங்கி விமான நிலையம் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
திருடப்பட்ட பொருள் மீட்கப்பட்டது.
அந்த ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) குற்றம் சுமத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

