சாங்கி விமான நிலையம் 2022ஆம் ஆண்டில் உலகின் ஆக பரபரப்பான அனைத்துலக விமானநிலையங்கள் பட்டியலில் ஒன்பதாம் இடத்தைப் பிடித்துள்ளது.
விமான நிலையங்கள் எத்தனை பயணிகளைக் கையாண்டன என்பதை அடிப்படையில் அப்பட்டியலை வெளியிட்டது அனைத்துலக விமான நிலையங்கள் மன்றம்.
2022ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையம் வழியாக 31.9 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
முதல் பத்து இடங்களில் வந்த ஒரே ஆசிய விமான நிலையமும் அதுதான்.
துபாய் அனைத்துலக விமான நிலையம் முதலிடம் பிடித்தது. அது 66 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. இரண்டாவது இடத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வந்தது. அவ்விமான நிலையம்வழி 58.2 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
52.5 மில்லியன் பயணிகளுடன் மூன்றாவது இடத்தில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் உள்ளது.
கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட பட்டியலில் சாங்கி விமான நிலையம் 7வது இடத்தில் இருந்தது. 2019ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையம்வழி 68.3 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர்.
தற்போது உலக அளவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை அகற்றப்பட்டுள்ளதால் விமானப் பயணங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.