தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

30 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் சாங்கி பயணச் சேவை

1 mins read
a420bcc2-8ffb-41f6-8164-885879902f63
சாங்கி விமான நிலையக் குழுமத்தின் துணை நிறுவனமான சாங்கி பயணச் சேவை பயணிகளுக்கு வெளிநாட்டு நாணய மாற்றும் சேவையுடன் இதர சேவைகளை வழங்குகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாறிவரும் சந்தை நிலவரங்களைச் சமாளிக்க 30 ஊழியர்களை சாங்கி பயணச் சேவை ஆட்குறைப்பு செய்கிறது.

இத்தகவலை அது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியருக்கு அவர்கள் பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் நான்கு வார ஊதியம் தரப்படும்.

குறைந்தபட்ச சேவைக்காலம் இல்லை.

சாங்கி பயணச் சேவையின் நிலையை வலுப்படுத்தவும் நீடித்த நிலைத்தன்மை மிக்க வளர்ச்சியை உறுதிசெய்யவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் துணை நிறுவனமான சாங்கி பயணச் சேவை, பயணிகளுக்கு வெளிநாட்டு நாணய மாற்றும் சேவையுடன் இதர சேவைகளையும் வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்