இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கப் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் நிலையிலிருந்தும் விலகியுள்ளார்.
தாம் வகித்துவந்த அத்தனை பதவிகளிலிருந்தும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் விலகிவிட்டதால், அவரது 20 ஆண்டுகால நெடிய அரசியல் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. ஆளும் மக்கள் செயல் கட்சியின் புதுமுகமாக 2006ஆம் ஆண்டு அறிமுகமானார் திரு ஃபைஷால்.
ஃபைஷாலின் அரசியல் பிரவேசமும் வளர்ச்சியும்
2006: தமது 38வது வயதில் மரீன் பரேட் குழுத்தொகுதியில் போட்டியின்றித் தேர்வாகி நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
2011 - 2015: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் முன்னர் பிரதிநிதித்த காக்கி புக்கிட் தொகுதி அல்ஜுனிட் குழுத்தொகுதியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரு ஃபைஷால் நீ சூன் குழுத்தொகுதிக்கு மாறினார்.
தொகுதி மறுசீரமைப்பால் புதிய குழுத்தொகுதியில் இடம்பெற்ற அவர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
2020: உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மகுடம் சூடிய இறுதிப் பொறுப்பு
14 ஆண்டுகள் நீ சூன் தொகுதியில் பணியாற்றிய திரு ஃபைஷால், மீண்டும் மரீன் பரேட் (மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ்) குழுத்தொகுதிக்குத் திரும்பினார்.
அங்குப் போட்டியின்றி வென்றதைத் தொடர்ந்து, மசகோஸ் ஸூல்கிஃப்லிக்குப் பதிலாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
2006ல் சாதாரண வேட்பாளராகத் தொடங்கி, சமூகத்தின் மிக முக்கியக் குரலாகத் திகழ்ந்து, தற்போது 2026ல் அரசியல் பயணத்திலிருந்து விடைபெறுவதாக திரு முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

