இனத்தை இழிவுபடுத்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

இனத்தை இழிவுபடுத்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
மத, இன நல்லிணக்கத்துக்கு எதிரான குற்றங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை
feb9d9cf-e430-4f9a-adab-52f19750904a
சிங்கப்பூர் நீதிமன்ற வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யூதர்களுக்கு எதிராக ‘வாட்ஸ்அப்’ செயலியில் செய்திகளைப் பதிவிட்ட ஆடவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) குற்றஞ்சாட்டப்பட்டது.

சியாவ் ஜியா ருயி என்ற 50 வயது சிங்கப்பூரர் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிருந்தபோது இனங்களுக்கு எதிரான அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களில் இருந்த விவரங்களின்படி, அதே ஆண்டு முதல் குற்றத்தைப் புரிந்தபிறகு இரண்டு மாதங்கள் கழித்து அவர் சீனா சென்றுள்ளார். அங்கிருந்தபடி மூன்று செய்திகளை அவர் அதே யூதர் சமூகத்துக்கு எதிராகப் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த புகார் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி காவல்துறைக்குக் கிடைத்தது. ஆடவர் மூன்று நாள்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

“சிங்கப்பூரின் மத, இன நல்லிணக்கத்துக்குப் பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் காவல்துறை தீவிரமாக எடுத்துக்கொள்ளும். குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

குறிப்புச் சொற்கள்