பதிவு ரத்தான கார்களை வைத்திருந்ததாக நிறுவனம்மீது குற்றச்சாட்டு

பதிவு ரத்தான கார்களை வைத்திருந்ததாக நிறுவனம்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Sep 2026 - 8:04 pm

1 mins read

விதிமுறைகளை மீறிய காரணத்தால் ஆட்டோபான் (Autobahn) வாடகை கார் நிறுவனத்தின்மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பதிவு ரத்து செய்யப்பட்ட இரண்டு கார்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அந்நிறுவனம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காருக்கும் இரண்டு குற்றச்சாட்டுகள் வீதம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருக்கக்கூடாது. மேலும், பதிவு ரத்து செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் அந்த வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட அல்லது அழிக்கப்பட வேண்டும். அது தொடர்பான ஆதாரத்தையும் உரிமையாளர்கள் வழங்க வேண்டும். இவை இரண்டையும் நிறுவனம் செய்யவில்லை.

அந்தக் கார்களின் பதிவுகள் முறையே 2026 ஜனவரி 21ஆம் தேதியும் மார்ச் 16ஆம் தேதியும் ரத்து செய்யப்பட்டன.

இந்த வழக்கு செப்டம்பர் 17ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அக்டோபர் 13ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்புடைய அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத வாகனத்தை வைத்திருந்தால் அல்லது பயன்படுத்தினால் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

வாகனங்கள் அகற்றப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்கத் தவறினால் 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
தனியார் வாடகை கார்குற்றம்பதிவு