சிங்கப்பூர் நாணயஆணையத்தின் துணைத்தலைவராக சீ ஹொங் டாட்

சிங்கப்பூர் நாணயஆணையத்தின் துணைத்தலைவராக சீ ஹொங் டாட்

1 mins read
e94f7647-2eb4-494f-86ce-0a519df49443
போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ்

போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார்.

நிதி இரண்டாம் அமைச்சருமான திரு சீ, அப்பொறுப்பில் 2027, மே 31ஆம் தேதி வரை இருப்பார் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

திரு சீ, மூன்று ஆண்டு காலத்துக்கு ஆணையத்தின் இயக்குநர் சபைக்கு ஜூன் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஆணையத்தின் புதிய தலைவராகத் துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் நியமிக்கப்பட்டார். திரு கான் வகித்த பொறுப்புக்கு திரு சீ இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்