செக் ஜாவா சதுப்புநிலம் மீண்டும் திறப்பு

செக் ஜாவா சதுப்புநிலம் மீண்டும் திறப்பு

1 mins read
a6967c9c-e953-4d24-b47e-d7b7eb2452e6
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) செக் ஜாவா சதுப்புநிலத்துக்கு அருகே எண்ணெய்க் கசிவுத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூரில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த செக் ஜாவா சதுப்புநிலம் சனிக்கிழமை (ஏப்ரல் 5) மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தை அடுத்து சிங்கப்பூரின் உபின் தீவுக்கு அருகே கடற்பகுதியில் எண்ணெய்த் திட்டுகள் காணப்பட்டன.

மேலும் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க செக் ஜாவா சதுப்புநிலத்தின் சம்பந்தப்பட்ட பகுதிகளில் எஞ்சியிருக்கும் எண்ணெய்த் திட்டுகள் இயற்கையான முறையில் கரையவிடப்படும் என்று தேசியப் பூங்காக் கழகம் சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அப்பகுதி தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றும் கழகம் குறிப்பிட்டது.

செக் ஜாவா சதுப்புநிலத்தைத் தவிர பல்வேறு மீன் பண்ணைகள், சாங்கி, பாசிர் ரிஸ் கடற்கரைப் பகுதிகள் ஆகியவையும் ஜோகூரின் லாங்சாட் கப்பல் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட மீன் பண்ணைகளில் ஒன்றான டி கேலோங் (De Kelong) ஆக அதிக பாதிப்புக்கு உள்ளானதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது. அதனால் அந்தப் பண்ணையிலிருந்து மீன்களை விற்பதும் விநியோகிப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்