செங் சான் பொது நூலகம் புதுப்பிக்கப்பட உள்ளது.
தற்போது அந்த நூலகம் ஹவ்காங் மால் கடைத்தொகுதியின் மூன்றாவது மாடியில் உள்ளது
புதுப்பிப்புப் பணிகள் அக்டோபர் 1லிருந்து நடைபெறும்.
அது ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
2027ஆம் ஆண்டின் முற்பாதியில் அது மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அது கடைத்தொகுதியின் ஐந்தாவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்படும்.
தனது நூலகங்களை உருமாற்றம் செய்ய தேசிய நூலக வாரியம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் புதுப்பிப்புப் பணிகள் அமைகிறது.
தற்போது செங் சான் பொது நூலகத்தின் பரப்பளவு 1,467 சதுர மீட்டராகும்.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட நூலகத்தின் பரப்பளவு 2,500 சதுர மீட்டராக அதிகரிக்கப்படும்.
கூடுதல் விவரங்கள் பிறகு வெளியிடப்படும் என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்தது.
செங் சான் பொது நூலகம் 1997ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அது ஹவ்காங் மால் கடைத்தொகுதியின் மூன்றாவது மாடியில் இயங்கும்.
புதுப்பிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது அதே கடைத்தொகுதியில் உள்ள நூல் வாசிப்பு, இரவல் வாங்கும் வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நூல்களைத் தேர்ந்தெடுத்து, நூலக இரவல் வாங்கும் முறைக்கு உட்படும் அட்டை அல்லது தேசிய நூலக வாரிய செயலியைப் பயன்படுத்தி புத்தகங்களை இரவல் வாங்கலாம்.
அந்த நூல் வாசிப்பு, இரவல் வாங்கும் வசதி ஒரே நேரத்தில் அதிகபட்சம் 550 நூல்களைக் கொண்டிருக்கும்.
அதிகபட்சம் 100 முன்பதிவுகள் அனுமதிக்கப்படும்

