சிங்கப்பூரில் காசோலைப் பயன்பாடு கிட்டத்தட்ட 80 விழுக்காடு குறைந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம் மக்கள் அதிக அளவில் மின்னிலக்க பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்துவது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது பொதுமக்கள் பலர் ‘பே நவ்’ போன்ற சேவைகளை எளிதாக பயன்படுத்துகின்றனர். அது அவர்களுக்கு வசதியாகவும் உள்ளது.
2016ஆம் ஆண்டு 61 மில்லியன் காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் 2023ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 14 மில்லியனுக்குக்கீழ் குறைந்தது.
2026ஆம் ஆண்டில் காசோலைகள் பயன்பாடு மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.