பாலர் பள்ளியில் குழந்தையை மானபங்கப்படுத்திய ஆடவரை மறைக்க முயன்றதாக நான்கு பெண்கள் மீது பிப்ரவரி 21ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டது.
அவர்களில் மூவர் மீது, கண்காணிப்புக் கேமராவில் பதிவான குற்றச்செயல் காட்சிகளை அழித்தது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
நான்கு பெண்களின் பெயர்கள், வயது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதால் அவர்களுடைய அடையாளங்களையும் இடத்தையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நான்கு பெண்களில் குறைந்தது ஒருவர் அப்பள்ளியில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மீது ஒன்று முதல் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை அழித்த குற்றச்சாட்டு மட்டுமல்லாமல் மானபங்கம் செய்தவரைப் பற்றிய எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
இந்த வழக்கு மார்ச் 21 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதில் தொடர்புடைய ஆடவர், மானபங்கப்படுத்திய எட்டுக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
வரும் மார்ச் 18ஆம் தேதி தம் மீதான குற்றச்செயல்களை அவர் ஒப்புக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

