சிறுவர்கள் மின்தூக்கி ஏறி இறங்கும் கூண்டுப்பகுதியில் நுழைந்ததாகச் சந்தேகம்

சிறுவர்கள் மின்தூக்கி ஏறி இறங்கும் கூண்டுப்பகுதியில் நுழைந்ததாகச் சந்தேகம்

1 mins read
நகர மன்றம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது
3064356c-2d6a-47ef-bfc3-35995a3486f4
டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட வெவ்வேறு காணொளிகளில், சிறுவர்கள் மின்தூக்கி கதவுகளைத் திறந்து அதன் ஏறுகாலில் நுழைவதைக் காணமுடிகிறது - படம்: QASHISNB/டிக்டாக்
Google News Preferred Icon

உட்லண்ட்சில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் சிறுவர்கள் சிலர் மின்தூக்கி ஏறி இறங்கும் கூண்டுப்பகுதியில் (lift shaft) நுழைவதைப்போல காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளியில், கறுப்புச் சட்டை அணிந்த சிறுவன் ஒருவன் மின்தூக்கி வாயிலில், நாற்காலியில் நின்றுகொண்டு, மின்தூக்கிக் கதவின் மேற்பகுதியில் திருகுவது போன்ற செயலில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

அதன்பின், நீல நிறச் சட்டை அணிந்த மற்றொரு சிறுவன், மின்தூக்கிக் கதவுகளை இழுத்துத் திறப்பதையும் அதில் மின்தூக்கி ஏறி இறங்கும் கூண்டின் மேற்பகுதி தெரிவதையும் காணமுடிகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த செம்பவாங் நகர மன்றம், புளோக் 603 உட்லண்ட்ஸ் டிரைவ் 42ல் நடந்த அந்தச் சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும் அது குறித்துக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேல்விவரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்