சிங்கப்பூரில் ஓட்டுநரில்லாப் பேருந்துகளை இயக்க சீன, மலேசிய நிறுவனங்கள் போட்டி

1 mins read
459922c9-4e92-43bc-b9e6-ef70bc695ef3
சீனாவின் வீ ரைட், மலேசியாவின் காஸ்வே லிங்க் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் சிங்கப்பூரில் ஓட்டுநரில்லாப் பேருந்துகளை இயக்க போட்டி போடுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓட்டுநர் இல்லாமல் வாகனங்கள் இயங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் சீனாவின் வீ ரைட் (WeRide), மலேசியாவில் பேருந்துகளை இயக்கும் காஸ்வே லிங்க் (Causeway Link) உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் சிங்கப்பூரில் ஓட்டுநரில்லாப் பேருந்துகளை இயக்க போட்டி போடுகின்றன.

அந்த நான்கு நிறுவனங்களும் தங்களது ஒப்பந்தப்புள்ளிகளை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த ஒப்பந்தப்புள்ளி குறித்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.

மரினா பே மற்றும் ‌ஷென்டன் வே, ஒன் நார்த் ஆகிய பாதைகளில் பேருந்துச் சேவைகளை வழங்க அந்த நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

ஜூன் 9ஆம் தேதியுடன் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் கெடு முடிவடைந்தது.

ஒப்பந்தம் கிடைக்கும் நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் பேருந்து சேவைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைக்கிள் & கேரெஜ் ஆட்டோமோட்டிவ், எம்கேஎக்ஸ் டெக்னாலஜிஸ் ஆகியவை அவ்வாய்ப்பைப் பெற போட்டியிடும் மற்ற இரு நிறுவனங்கள்.

குறிப்புச் சொற்கள்