சைனாடவுன் உணவங்காடியில் தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டுள்ள காற்றோட்ட சாதனங்கள்

சைனாடவுன் உணவங்காடியில் தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டுள்ள காற்றோட்ட சாதனங்கள்

பிரச்சினையால் உணவுக் கடைக்காரர்கள் அவதிப்பட்டனர்
1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jun 2026 - 3:41 pm

1 mins read

சைனாடவுன் காம்ப்ளக்ஸ் உணவங்காடியில் வெப்பக் காற்றை வெளியேற்றும் காற்றோட்ட சாதனங்கள் (exhaust system) பழுதானதால் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உணவுக் கடைக்காரர்கள் அவதிப்படட்னர்.

இப்போது அங்கு கற்றோட்ட சாதனங்கள் தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கடைகளில் இரண்டில் புதன்கிழமை (ஜூன் 24) மின்சாரப் பணியாளர்கள் தற்காலிகக் காற்றோட்ட சாதனங்களைப் பொருத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

சமைக்கும் பகுதிகளிலிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றும் சாதனங்கள் இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து வேலை செய்யவில்லை என்று உணவங்காடிக் கடைக்காரர்கள், சிஎன்ஏ ஊடகத்திடம் தெரிவித்தனர். அதனால், சைனாடவுன் காம்ப்ளக்ஸ் உணவங்காடி நிலையக் கடைகளில் வெப்பம் அளவுக்கதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக அந்த வெப்பத்தைச் சகித்துக்கொள்ளவேண்டியிருந்ததாகக் கடைக்காரர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சாதனங்கள் சில கடைக்காரர்களுக்கு அதிக நம்பிக்கை அளிக்கவில்லை. தற்காலிகக் காற்றோட்ட சாதனம் சரியாகச் சோதிக்கப்படுமா போன்ற கவலைகள் அவர்களுக்கு உள்ளன.

வேறு சிலர் இந்தத் தீர்வை வரவேற்றுள்ளனர். பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு கிடைத்திருப்பதை எண்ணி அவர்கள் நிம்மதி தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்