சீன ஜாம்பவானுடன் சிங்கப்பூரின் மின் ஸ்கூட்டர் நிறுவனம் கூட்டணி

1 mins read
b471bb3a-7dd5-4259-b19d-c7ba549adf81
‘எக்ஸ்1’ முன்மாதிரிகளைத் தயாரிக்கும் பணியில் ஷென்சென்னின் ‘பிஒய்டி இலெக்டிரானிக்ஸ்’ நிறுவனத்துடன் சிங்கப்பூரின் மின் ஸ்கூட்டர் நிறுவனம் இணையவுள்ளது. - படம்: ஸ்கோர்பியோ இலெக்டிரிக்

சிங்கப்பூரின் மின் ஸ்கூட்டர் நிறுவனமான ‘ஸ்கோர்பியோ இலெக்டிரிக்’, அதன் முதல் ‘எக்ஸ்1’ உற்பத்திக்கு சீனாவின் ஷென்சென்னிலுள்ள ‘பிஒய்டி’ குழுமத்தை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஷென்சென் பிஒய்டி இலெக்டிரானிக்ஸ் ‘பிஒய்டி’யின் கைப்பேசி, மடிக்கணினி கிளை நிறுவனமாகும். இந்நிலையில் ‘எக்ஸ்1’ உற்பத்திக்கு முந்தைய முன்மாதிரிகளை (பிபிஆர்) உருவாக்கும் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மாதிரிகள் கடுமையான சோதனைகளுக்கும் சான்றளிப்புக்கும் உட்படுத்தப்பட்டு பொருளின் உயர்தரமும் உயர்செயல்திறனும் உறுதிசெய்யப்படும் என்று ஸ்கோர்பியோ தெரிவித்தது.

இதையடுத்து இத்தாலியின் மிலானில் நவம்பர் 7 முதல் 12 வரை நடைபெறவுள்ள முக்கிய மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த ‘எக்ஸ்1’ காட்சிக்கு வைக்கப்படும்.

இதே கண்காட்சியில் மற்ற அதிநவீன மின்சார மோட்டார்சைக்கிள் மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூர், சீனா நிறுவனங்கள் இரண்டும் தங்களின் கூட்டணி தொடர்பில் 2022ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அறியப்படுகிறது.

இதற்கிடையே, ‘எக்ஸ்1’ இவ்வாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கான முக்கிய வாடிக்கையாளர் சந்தை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்