காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்

காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்

பிக்சாபே

13 Oct 2023 - 5:14 pm

1 mins read

காவல்துறை அதிகாரிகள் இருவர் சீன நாட்டவர் ஒருவரை அணுகி சோதனை செய்தபோது அடையாள அட்டையைக் காட்டத் தவறிய அவர், சோதனையை நிறுத்துவதற்கு அதிகாரிகளில் ஒருவருக்கு $76 லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் தெரிவிக்கப்பட்டது.

ஓங் ஷூ ஹொங் என்ற அந்தக் காவல்துறை அதிகாரி,அதனை ஏற்க மறுத்தார். பின்னர், சூ ஷூப்பெய் என்ற அந்தச் சீனர் கைதுசெய்யப்பட்டு, அவருக்குக் கைவிலங்கு போடப்பட்டது.

இருப்பினும், அவர் மீண்டும் மீண்டும் திரு ஓங்கிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். இருப்பினும், ஓங் அவருக்குப் பிடிகொடுக்கவில்லை.

வேலை ஏதுமில்லாத அந்த 31 வயது சூ, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு அக்டோபர் 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்