கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ரயில், பேருந்துச் சேவைகள் நீட்டிப்பு

2 mins read
778040b0-79be-49ca-9c79-609af14330a1
பல்வேறு பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான இம்மாதம் 24ஆம் தேதி பொதுப் பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி இரண்டும் பொதுப் பேருந்து, ரயில் சேவைகளின் நேரத்தை நீட்டிக்கின்றன.

வடகிழக்கு, டெளன்டவுன் ரயில் பாதைகளில் டிசம்பர் 24ஆம் தேதி ரயில் சேவை ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் அதன் இணையத்தளத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்தது. அன்றைய தினம், அதே அளவு நேரத்துக்கு செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையும் (எல்ஆர்டி) நீட்டிக்கப்படும்.

பேருந்துச் சேவைகள் 60A, 63M, 114A, 222, 225G, 228, 229, 232, 238, 261, 269, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812 ஆகியவை அவை இயங்கும் பேருந்து முனையங்களில் கூடுதல் நேரத்துக்குச் செயல்படும்.

அவற்றோடு 10e, 14e, 30e, 89e, 174e, 196e, 454, 456, 513, 652, 654, 655, 660/660M, 667, 668, 671, 672, 675, 676, 677, 679, 680, 681, 682, 850E ஆகிய பேருந்துச் சேவைகள் டிசம்பர் 24ஆம் தேதி உச்சநேரத்தில் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்படும். அன்றைய தினம் பல அலுவலகங்கள் வழக்கத்தைவிட முன்னரே மூடப்படுவது இதற்குக் காரணம்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்ட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைகளிலும் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் சேவை நேரம் நீட்டிக்கப்படும்.

மேல்விவரங்களுக்கு எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையத்தளங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்