வட்ட ரயில் பாதை 6 நிறைவு: சிறப்பு எம்ஆர்டி நினைவுப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு

வட்ட ரயில் பாதை 6 நிறைவு: சிறப்பு எம்ஆர்டி நினைவுப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு

2 mins read
dbe63b32-d169-44ce-a61c-49664fe2f461
‘சர்க்கிள் இன்’ என்ற போட்டியில் பங்கெடுப்போர், கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு புதிய வட்ட ரயில் பாதை நிலையங்களான கெப்பல், கென்டோன்மெண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய மூன்றையும் சரியாகக் கண்டறிய வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வட்ட ரயில் பாதை 6 எம்ஆர்டி நிலையங்களின் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், நிலப் போக்குவரத்து ஆணையம் பொதுமக்களுக்குச் சிறப்பு நினைவுப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு வழங்கும் வகையில் இணையம் வழி போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆணையம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ‘சர்க்கிள் இன்’ என்ற போட்டியை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தொடங்கியது.

இதில் பங்கேற்பவர்கள், கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு புதிய வட்ட ரயில் பாதை நிலையங்களான கெப்பல், கென்டோன்மெண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய மூன்றையும் சரியாகக் கண்டறிய வேண்டும்.

அத்துடன், இந்த மூன்றில் தாங்கள் எந்த நிலையத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் மற்றும் அதற்கான காரணம் என்ன என்பதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஜூன் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவுக்குள் அனுப்பப்படும் பதிவுகளிலிருந்து மொத்தம் 15 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு வட்ட ரயில் பாதை பொம்மை ரயிலும் அடுத்த ஏழு வெற்றியாளர்களுக்கு சாவிக்கொத்துகளும், எஞ்சியவர்களுக்குக் காந்த வில்லைகளும் பரிசாக வழங்கப்படும்.

33 நிலையங்களுடன் 39 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டுள்ள முழுமையான வட்ட ரயில் பாதை, பயணிகளுக்குப் பெரும் வசதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 12 சந்திப்பு நிலையங்கள் மூலம் பயணிகள் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வடக்கு-கிழக்கு, டௌன்டவுன் மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய ரயில் பாதைகளுக்கு எளிதாக மாற முடியும்.

உள்ளூர் கலைஞர்களின் தனித்துவமான கலைப்படைப்புகள் மற்றும் கட்டடக்கலை அம்சங்களுடன் கூடிய இந்தப் புதிய நிலையங்கள் ஜூலை 12 ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக, பொதுமக்கள் ஜூலை 4ஆம் தேதி காலை 9:30 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நிலையங்களை நேரில் பார்வையிட ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்