தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கிளமெண்டி வீவக புளோக் தரைத்தளத்தில் சுயநினைவின்றிக் கிடந்த 41 வயது ஆடவர்

50 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்

2 mins read
392809ff-dd52-4848-b84d-b75a6dbd09cd
புளோக் 311பியின் தரைத்தளத்தில் ட்ரிவேலிஸ் வசிப்போர் குழு அலுவலகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிளமெண்டியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் தரைத்தளத்தில் 41 வயது ஆடவர் ஒருவரைக் கொன்றதாக 50 வயது ஆடவர் ஒருவர்மீது புதன்கிழமை (அக்டோபர் 23) குற்றஞ்சாட்டப்படும்.

அந்த 41 வயது ஆடவர், சுயநினைவின்றித் தரையில் விழுந்து கிடந்தார்.

கிளமெண்டி அவென்யூ 4ல் உள்ள ட்ரிவேலிஸ் (Trivelis) குடியிருப்புப் பேட்டைக்குச் சேவையாற்றும் ட்ரிவேலிஸ் வசிப்போர் குழுவில் அந்த இரு ஆடவர்களும் அடித்தள நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும், திங்கட்கிழமை (அக்டோபர் 21) பிற்பகலில் அந்த 41 வயது ஆடவரை அந்த 50 வயது ஆடவர் தாக்கியதால் அப்பேட்டையில் அலறல் சத்தம் கேட்டது.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த 41 வயது ஆடவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் அந்த 50 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

அவ்விருவரும் அப்பேட்டையின் குடியிருப்பாளர்களாக இருந்தனர்.

புளோக்குகள் 311பிக்கும் 311சிக்கும் இடையே ‘பிக்-அப் பாயிண்ட்’டிலிருந்து அந்த 41 வயது ஆடவரை அந்த 50 வயது ஆடவர் துரத்தும் காட்சி காணொளி ஒன்றில் பதிவானது. புளோக் 311பியின் தரைத்தளத்தில் ட்ரிவேலிஸ் வசிப்போர் குழு அலுவலகத்துக்கு முன்னால் அந்த ‘பிக்-அப் பாயிண்ட்’(பயணிகள் வாகனங்களில் ஏறி இறங்கும் இடம்).

தாக்கப்பட்டவர் திரு வின்சன் கூ என்பவராக இருக்கலாம் என அறியப்படுகிறது. அந்த 50 வயது ஆடவர் தாக்கியதாகக் கூறப்பட்டபோது, அந்த அலுவலகத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில் வடிகாலுக்கு அருகே திரு கூ தடுக்கி விழுந்தார்.

திரு கூ தாக்கப்பட்டு தரையில் விழுந்து கிடந்தபோது, அவரின் மனைவி என நம்பப்படுபவர் அலறினார்.

அங்கிருந்த வாகன நிறுத்தக் காவலர் ஒருவருடன் சேர்ந்து, அந்த 50 வயது ஆடவரிடமிருந்து தம் கணவரைக் காக்க முற்பட்டும் அதற்குப் பலனளிக்கவில்லை.

அங்கிருந்த ஒருவர், காவல்துறையை அழைக்கும்படி கூச்சலிட்டார்.

அந்தச் சந்தேக ஆடவர் பின்னர் தம் கவனத்தை திருவாட்டி கூ மீது திருப்பியதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர். அலறியடித்துக்கொண்டு ஓடிய அவரை அந்த ஆடவர் துரத்தினார்.

புளோக் 311சியில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் திருவாட்டி கூ தஞ்சமடைந்தார்.

குறிப்புச் சொற்கள்