தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் மூடப்பட்ட நிறுவனம்: நீதிமன்றம் தலையிட்டது

1 mins read
eb47b9e5-63ea-46bd-8097-c18664b1c031
நியாயத்தின் அடிப்படையில், மூடிய நிறுவனத்தைத் திறக்க நீதிமன்றம் ஒருதலைபட்சமாக முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீவக வீடு ஒன்றின் புதுப்பிப்புப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் மீது வீட்டு உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக அந்நிறுவனத்தின் பதிவை உயர் நீதிமன்றம் மீட்டுள்ளது.

‘கான்செப்ட் வெர்க்’ (Concept Werk) என்னும் அந்த நிறுவனம், சர்ச்சை எழுவதற்கு முன்பாகவே கலைக்கப்பட்டு வர்த்தகப் பதிவில் இருந்து விலகிவிட்டது.

இருப்பினும், வர்த்தகம் மூடப்பட்ட பின்னரும் அதனால் பாதிக்கப்பட்டவர் இருப்பின், நியாயத்தின் அடிப்படையில் நீக்கப்பட்ட வர்த்தகப் பதிவையும் வர்த்தக நடவடிக்கைகளையும் மீட்க நீதிமன்றம் ஒருதலைபட்சமாக முடிவெடுக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கான்செப்ட் வெர்க் பதிவுள்ள நிறுவனமாக அக்டோபர் 23ஆம் தேதி உயர் நீதிமன்றம் அறிவித்தது.

மற்ற துறைகளைக் காட்டிலும் புதுப்பிப்பு குத்தகையாளர் சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வருவதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

2023ஆம் ஆண்டில் அதுபோன்ற 1,168 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் அதற்கு முன்னர் ஈராண்டுகளில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் அது குறைவு.

2022ஆம் ஆண்டு 1,454 புகார்களும் 2021ஆம் ஆண்டு 1,300 புகார்களும் புதுப்பிப்பு குத்தகை நிறுவனங்களுக்கு எதிராக அளிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்