பி பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 5.3% குறைந்துள்ளது

பி பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 5.3% குறைந்துள்ளது

2 mins read
5a05cd31-790a-4100-b818-2ad3c01e92f1
மிகவும் சக்தி வாய்ந்த பெரிய கார்களுக்கு பி பிரிவு சிஓஇ பயன்படுத்தப்படுகிறது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

கடந்த 16 ஆண்டுகளில் காணப்படாத அளவு, ‘பி’ பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடைசியாக 2020ஆம் ஆண்டு ‘ஏ’ பிரிவு வாகனங்களின் சிஓஇ கட்டண அளவைவிட ‘பி’ பிரிவுக் கட்டணம் குறைந்தது. அதற்கடுத்து இவ்வாண்டு பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த ஏலத்தில் இந்த அளவில் அப்பிரிவின் விகிதங்கள் குறைந்துள்ளன.

இம்மாத ஏலத்தில் ‘ஏ’ பிரிவின் சிறிய வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 0.1 விழுக்காடு உயர்ந்து $106,320 என்று முடிந்தது. பிப்ரவரி 4ஆம் தேதி நடந்த முந்தைய ஏலத்தில் அது $106,401 என்று இருந்தது.

‘பி’ பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம், 5.3 விழுக்காடு இறக்கம் கண்டு $105,001 ஆனது. கடந்த ஏலத்தில் அது $110,890 ஆக கணிக்கப்பட்டது.

இந்த வீழ்ச்சிக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் சிறப்புக் கூடுதல் பதிவுக் கட்டணச் சலுகை (PARF) ) பாதியாகக் குறைக்கப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பொதுப்பிரிவு வாகனங்களுக்கான ‘இ’ பிரிவு சிஓஇ கட்டணம் 2.7 விழுக்காடு குறைந்து $112,890 என்று அமைந்தது. அது முந்தைய ஏலத்தில் $116,000 என்று இருந்தது.

கடந்த ஏலத்தில் $74,801 என்றிருந்த ‘சி’ பிரிவு வர்த்தக வாகனங்களின் சிஓஇ கட்டணம் 0.3 விழுக்காடு ஏற்றம் கண்டு $74,999 என்று முடிந்தது.

பிரிவு ‘டி’ யின் மோட்டார்சைக்கிள்களின் சிஓஇ உரிமக் கட்டணம் 3.6 விழுக்காடு குறைந்து $7,989 என்று உள்ளது. முந்தைய ஏலத்தில் அது $8,289 என்று இருந்தது.

குறிப்புச் சொற்கள்