சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் புதிய உச்சம்

சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் புதிய உச்சம்

1 mins read
80cbdea8-d51c-49dc-8b28-8245b00736c7
வணிக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவு சிஓஇ கட்டணமும் முன்னில்லாத வகையில் $95,000 என உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய, ஆற்றல் குறைந்த கார்களையும் மின்சார கார்களையும் உள்ளடக்கும் ‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் இதுவரை இல்லாத அளவாக 129,000 வெள்ளியைத் தொட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முந்திய ஏலக்குத்தகையில் ‘ஏ’ பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $123,847ஆக முடிந்திருந்த நிலையில், புதன்கிழமை (ஜூலை 8) நடந்த ஏலக்குத்தகையில் அது 4.2 விழுக்காடு கூடியது.

கடந்த 2025 அக்டோபரில் அக்கட்டணம் $128,105ஐ எட்டியதே முன்னைய உச்சம்.

அண்மைய ஏலக்குத்தகையில் மற்றப் பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் உயர்ந்தது.

பெரிய, ஆற்றல்மிகு கார்களுக்கான ‘பி’ பிரிவில் சிஓஇ கட்டணம் ஆறு விழுக்காடு கூடி, $130,889ஐ எட்டியது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் $129,002லிருந்து $129,801ஆக சற்று கூடியது. மோட்டார்சைக்கிள்களைத் தவிர்த்து, மற்ற வாகனங்களை இப்பிரிவின்கீழ் பதிவுசெய்யலாம்.

‘டி’ பிரிவில் இடம்பெறும் மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் இவ்வாண்டில் மூன்றாவது முறையாக ஐந்து இலக்கத்தைத் தாண்டியது. கடந்த ஏலக்குத்தகையில் $9,989ஆக முடிவடைந்த அக்கட்டணம், அண்மைய ஏலக்குத்தகையில் $10,201ஆக உயர்ந்தது.

அதுபோல, வணிக வாகனங்கள் இடம்பெறும் ‘சி’ பிரிவிலும் சிஓஇ கட்டணம் புதிய உச்சத்தை எட்டியது. கடந்த ஜூன் மாதத்தின் முதலாவது ஏலக்குத்தகையில் $94,000ஐத் தொட்ட அக்கட்டணம், இம்முறை $95,000ஐ எட்டியது.

குறிப்புச் சொற்கள்