தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உச்சம் தொட்ட சிறிய வகை கார்களுக்கான சிஓஇ கட்டணம்

1 mins read
fc16a596-01c1-4dd3-b162-71a6f420f74f
சிஓஇ கட்டண அதிகரிப்பால் சிறிய வகை கார்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் முன் இல்லாத அளவில் ஏற்றம் கண்டு $107,889ஆகப் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக கார்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 3.2 விழுக்காடு அதிகரித்தது. பெரிய வகை கார்களுக்கான கட்டணம் $124,400லிருந்து $127,501ஆக உயர்ந்தது. இப்பிரிவுக்கான கட்டணம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் 2.3 விழுக்காடு உயர்ந்து $127,901ஆகப் பதிவானது. இப்பிரிவை மோட்டார் சைக்கிள் அல்லாத மற்ற வாகனங்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இது பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் மட்டுமே குறைந்தது. அது 0.9 விழுக்காடு சரிந்து $71,556ஆகப் பதிவானது. மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 3.3 விழுக்காடு உயர்ந்து $9,101ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்