வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள், புதன்கிழமை (மே 21) முடிவடைந்த ஏலக் குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளில் இறக்கம் கண்டன.
சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘ஏ’ பிரிவு) சிஓஇ கட்டணம் 0.5 விழுக்காடு குறைந்து $102,501ஆகப் பதிவானது. மே 7ஆம் தேதி நடந்த இதற்கு முந்தைய ஏலத்தில் அது $103,009ஆக இருந்தது.
கடந்த நான்கு ஏலக் குத்தகைகளாக ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் உயர்ந்திருந்தது.
பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘பி’ பிரிவு) கட்டணம் $119,890லிருந்து 2.4 விழுக்காடு சரிந்து $116,988ஆகப் பதிவானது.
பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) கட்டணம் $118,889லிருந்து 0.7 விழுக்காடு இறங்கி $118,010 ஆனது.
மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் வெறும் $2 குறைந்து $8,707 ஆனது.
ஆனால், வணிக வாகனங்களுக்கான (‘சி’ பிரிவு) கட்டணம் $62,590லிருந்து 1 விழுக்காடு கூடி $63,189ஆகப் பதிவானது.

