தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெரும்பாலான வாகனப் பிரிவுகளின் சிஓஇ கட்டணம் ஏற்றம்

1 mins read
3fabd36a-b6be-4f98-99f7-5cb85c079aca
பொதுப் பிரிவுக்கான கட்டணம் ஆக அதிகமாக உயர்ந்துள்ளது. அப்பிரிவுக்கான கட்டணம் 5.8 விழுக்காடு அதிகரித்து $113,104ஆகப் பதிவானது. - படம்: சாவ்பாவ்

பெரும்பாலான வாகனப் பிரிவுகளின் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் அதிகரித்துள்ளது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் ஆக அதிகமாக உயர்ந்துள்ளது. அப்பிரிவுக்கான கட்டணம் 5.8 விழுக்காடு அதிகரித்து $113,104ஆகப் பதிவானது.

பொதுப் பிரிவை மோட்டார் சைக்கிள் அல்லாத மற்ற பிரிவுகளுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அது பொதுவாகப் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சிறிய வகை கார்களுக்கான கட்டணம் $96,490லிருந்து $98,524ஆக உயர்ந்தது.

பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 3.5 விழுக்காடு அதிகரித்து $110,001ஆகப் பதிவானது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் $1 குறைந்தது. அதன் கட்டணம் $74,000.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் ஒரு விழுக்காடு அதிகரித்தது. அது $9,801லிருந்து $9,900ஆக ஏற்றம் கண்டது.

குறிப்புச் சொற்கள்