சிங்கப்பூரின் சிஓஇ எனப்படும் வாகன உரிமைச் சான்றிதழுக்கான கட்டணங்கள் அனைத்துப் பிரிவுகளிலும் புதன்கிழமை (ஏப்ரல் 8) ஏற்றம் கண்டுள்ளன.
அவற்றில் ‘ஏ’ பிரிவு கட்டணம் ஆக அதிகமாக 5.5 விழுக்காடு உயர்ந்து $118,000 என்ற அளவை எட்டியுள்ளது.
சிறிய கார்களுக்கான அப்பிரிவுச் சான்றிதழ் கட்டணங்கள், கடந்த மார்ச் 18ஆம் தேதி நடந்த ஏலத்தில் $111,890 என்ற நிலையில் இருந்தது.
பெரிய சக்திவாய்ந்த ‘பி’ பிரிவு வாகனச் சான்றிதழ் கட்டணம் 4.7 விழுக்காடு உயர்ந்து $121,000 என்று உள்ளது. அது முன்னதாக, $115,568 என்று இருந்தது.
பொதுப் பிரிவுக்கான கட்டணங்கள் 2.4 விழுக்காடு ஏற்றம் கண்டது. அது $118,119 என்ற நிலையிலிருந்து $121,000 என்று பதிவானது.
வர்த்தகப் பிரிவு ‘சி’ வாகனங்களுக்கான கட்டணம், 2.6 விழுக்காடு உயர்ந்து $80,001 என்ற எண்ணிக்கையை எட்டியது. அதற்கு முன்பாக அது $78,000 என்று இருந்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவு கட்டணம் 2.6 விழுக்காடு உயர்ந்து $10,000 என்ற எண்ணிக்கையை அடைந்தது. அதற்கு முன்பாக அது $9,589 என்ற நிலையில் இருந்தது.
ஒருவர் வாகனத்தைச் சொந்தமாக வாங்கவும் பயன்படுத்தவும் சிங்கப்பூரில் கட்டாயமாக வாகன உரிமைச் சான்றிதழைப் பெற வேண்டும்.

