ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $389 குறைந்து $93,900ஆகப் பதிவானது.
இதற்கு முன்பு கடந்த நான்கு மாதங்களாக இப்பிரிவுக்கான கட்டணம் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டது.
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் $106,101லிருந்து $105,889ஆகக் குறைந்தது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் 0.7 விழுக்காடு அதிகரித்து $106,001ஆகப் பதிவானது.
மோட்டார் சைக்கிளைத் தவிர இப்பிரிவை அனைத்து வாகனப் பிரிவுகளுக்கும் பயன்படுத்தலாம்.
ஆனால் அது பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 3 விழுக்காடு சரிந்து $9,310 ஆனது.
வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் $71,100லிருந்து $72,400ஆக ஏற்றம் கண்டது.