பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணம் குறைந்தது

பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணம் குறைந்தது

1 mins read
731400e5-e7ee-4eee-acd3-5551b4d75606
சீனப் புத்தாண்டு விடுமுறையால் கார் விற்பனை வலுவிழந்ததாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அண்மைய ஏலக்குத்தகையில், கார்களுக்கும் மோட்டார்சைக்கிள்களுக்குமான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஓஇ) குறைந்தன.

வர்த்தக வாகனப் பிரிவில் மட்டும் கட்டணம் உயர்ந்தது. சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $76,801ஆகப் பதிவானது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த $79,000ஐ விட அது குறைவு.

பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம், முன்னதாக இருந்த $102,338ஐ காட்டிலும் இப்போது $97,000ஆகப் பதிவானது.

மோட்டார்சைக்கிளைத் தவிர்த்து, மற்ற எந்த வகை வாகனத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பொதுப் பிரிவு சிஓஇ கட்டணம், $94,006ஆக உள்ளது. இதற்கு முன்னர் அது $100,101ஆக இருந்தது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம், கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ஆகக் குறைவாக $8,911ஆகப் பதிவானது.

இருப்பினும், வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த $72,001ஐ காட்டிலும், இப்போது அதிகரித்து $73,001ஆக உள்ளது.

சீனப் புத்தாண்டு விடுமுறையால் குறைவான கார்கள் விற்பனையானதாக வர்த்தகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அதனால் வாகன உரிமைச் சான்றிதழுக்கான தேவையும் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்