வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) ஆக அண்மைய ஏலக்குத்தகை புதன்கிழமை (ஜூன் 18) நடத்தப்பட்டது.
இதில் மோட்டார் சைக்கிள்களுக்கான பிரிவைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் அதிகரித்துள்ளது.
பெரிய வகை கார்களுக்கான பிரிவின் கட்டணம் 3.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அப்பிரிவின் கட்டணம் $113,000லிருந்து $116,670ஆக உயர்ந்தது.
சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 1.2 விழுக்காடு ஏற்றம் கண்டு $98,124ஆகப் பதிவானது.
இதற்கு முன்பு இரண்டு ஏலக்குத்தகைகளில் கார்களுக்கான இரண்டு பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் குறைந்தது. தற்போது அது ஏற்றம் கண்டுள்ளது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் 2.6 விழுக்காடு கூடி $116,889ஆகப் பதிவானது.
மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களுக்கும் பொதுப் பிரிவைப் பயன்படுத்தலாம். ஆனால் அது பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 4.8 விழுக்காடு அதிகரித்தது. அது $62,000லிருந்து $65,000ஆக ஏற்றம் கண்டது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 4.4விழுக்காடு குறைந்தது.
அது $9,000லிருந்து $8,600ஆகப் பதிவானது.
அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தம் 4,207 ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

