மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) ஒதுக்கீடு 19,052 என்ற எண்ணிக்கையை எட்டும்.
எனவே கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் மொத்த ஒதுக்கீடு 1.2 விழுக்காடு ஏற்றமடையும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அறிவித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கு 18, 824 சிஓஇ சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டன.
புதிய ஒதுக்கீட்டின் ஏலம் மே மாதம் 4ஆம் தேதி நடைபெறும்.
ஒதுக்கீடு உயர்ந்ததற்கு ‘பி’ பிரிவு சிஓஇ சான்றிதழ்கள் 7 விழுக்காடு ஏற்றம் கண்டு 5, 205 என்ற எண்ணிகையை எட்டியது ஒரு முக்கிய காரணம்.
மாறாக ‘ஏ’ பிரிவின் ஒதுக்கீடு 2 விழுக்காடு வீழ்ச்சியடைந்து 7,434 என்ற எண்ணிக்கையை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மோட்டார்சைக்கிள் (பிரிவு ‘டி’) ஒதுக்கீடும் 3,145 எனக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
‘சி’ பிரிவு வர்த்தக வாகனங்களின் ஒதுக்கீடு 1,742 என்று மாற்றம் இன்றி இருந்தாலும் பொதுப் பிரிவு (இ) ஒதுக்கீடு 1,526 என்ற எண்ணிக்கைக்கு உயரும் எனவும் ஆணையம் விவரங்களை வெளியிட்டது.
மாதம் தொடங்கியதும் முதல், மூன்றாம் திங்கட்கிழமைகளில் ஏலம் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
விதிவிலக்காக ஜூன், ஜூலை மாதங்களுக்கு இடையே மட்டும் கூடுதலாக மூன்று வார இடைவெளி ஏலத்துக்கு வழங்கப்படும்.

