தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்கவர் கிளிகள் உள்ளூர் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்

1 mins read
e6178cdb-adf4-4a41-9b87-ec61d2e4b560
மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் கிளிக் கூட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவா சூ காங் வட்டாரத்தில் குறிப்பிட்ட வகைக் கிளிகள் மீண்டும் அதிக அளவில் காணப்பட்டன. இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டிலும் 2023ஆம் ஆண்டிலும் அவ்வகைக் கிளிகள் அவ்வட்டாரத்தில் காணப்பட்டன.

அவ்வகைக் கிளிகள் சிங்கப்பூரில் இருப்பது அரிது. அவை கூட்டங் கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதைக் காண மிகவும் அழகாக இருந்தாலும் உள்ளூர் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

சுவா சூ காங் அவென்யூ 4ல் உள்ள புளோக் 415க்கும் சுவா சூ காங் சென்ட்ரலில் உள்ள புளோக் 352க்கும் இடைப்பட்ட மரங்களின் கிளைகளில் குறைந்தது 250 கிளிகள் காணப்பட்டன.

இவ்வகைக் கிளிகள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்தும் பாலி, ஜாவா போன்ற இடங்களிலிருந்தும் வருகின்றன.

உள்ளூர்க் கிளி வகைகளுடன் அவை தீனிக்குப் போட்டியிடக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்