பொங்கோலில் தானியக்க வாகனச் சேவையை அறிமுகப்படுத்தும் கம்ஃபர்ட்டெல்குரோ

பொங்கோலில் தானியக்க வாகனச் சேவையை அறிமுகப்படுத்தும் கம்ஃபர்ட்டெல்குரோ

1 mins read
5d4e9747-a4fd-4c31-8113-c43682a23d52
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிராப் நிறுவனம் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச தானியக்க வாகனச் சேவைகளை வழங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்தச் சேவையை கம்ஃபர்ட்டெல்குரோ அறிமுகப்படுத்தியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோல்வாசிகள், அடித்தளச் சமூகத் தலைவர்கள் ஆகியோருக்கு கம்ஃபர்ட்டெல்குரோவின் இடைவழித் தானியக்க வாகனச் சேவையைச் சோதித்துப் பார்க்க அந்நிறுவனம் ஏப்ரல் 7ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளது.

பொங்கோல் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள், போக்குவரத்து முனையங்கள், முக்கிய வசதிகள் ஆகியவற்றை இணைக்கும் ஏழு நிறுத்தங்கள் கொண்ட 2 கி.மீ. நீளமுடைய சுற்றுப்பாதையைப் பொதுமக்களுக்கான தானியக்க வாகன முன்பதிவுத் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்கள் பயன்படுத்தலாம்.

அல்லது அதே சுற்றுப்பாதையில் 30 நிமிடங்கள் பயண நேரம் கொண்ட வழித்தடத்தையும் அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிராப் நிறுவனம் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச தானியக்க வாகனச் சேவைகளை வழங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்தச் சேவையை கம்ஃபர்ட்டெல்குரோ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தக் கட்டத்தில், காம்ஃபர்ட்டெல்குரோ வழங்கும் மேற்குறிப்பிட்ட வழித்தடத்திற்கான பயணங்கள் இலவசமாகும்.

அதில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை, பொதுமக்களுக்கான அதிகாரபூர்வச் சேவை தொடங்கும் நாள் ஆகியவை குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் இன்னும் முடிவு செய்யவில்லை.

மேலும், வர்த்தக ரீதியிலான சேவை தொடங்கும்போது அதற்கான பயணக்கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்