கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி சேவைகளுக்கு மூத்தோரும் பராமரிப்பாளர்களும் இனி எளிமையாகப் பதிவுசெய்ய முடியும்.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சிறப்பு கியூஆர் குறியீடு அதற்கு வழிவகுக்கிறது.
சுற்றுப்பயணிகளும் அந்தக் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி டாக்சி சேவைகளுக்கு எளிமையாகப் பதிவுசெய்யலாம்.
குறிப்பிட்ட ஓர் இடத்துக்குச் செல்ல விரும்பும் பயணிகள் கம்ஃபர்ட்டெல்குரோ செயலியில் தங்களை ஏற்றிச் செல்லவேண்டிய இடத்தைப் பதிவிடுவது வழக்கம்.
அதற்குப் பதிலாக, ஒருசில இடங்களில் ஒட்டப்படும் கியூஆர் குறியீடு பயணிகளின் வேலையை எளிமையாக்கும். கம்பர்ட்டெல்குரோ செயலி மூலம் பயணிகள் கியூஆர் குறியீட்டை வருடும்போது அவர்களை ஏற்றிச் செல்லவேண்டிய இடம் தானாகச் செயலியில் பதிவாகிவிடும்.
முதற்கட்டமாக, தாய் ஹுவா குவான் அறநிறுவனம் நடத்தும் துடிப்பாக முதுமையடையும் மூன்று நிலையங்களில் கியூஆர் குறியீடுகள் ஓட்டப்படும்.
சிங்கப்பூரின் பிற பகுதிகளுக்கும் அந்தச் சிறப்பு கியூஆர் குறியீட்டை அறிமுகம் செய்யத் திட்டமுள்ளதாகக் கம்ஃபர்டெல்குரோ நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குக் கூடங்கள், பேருந்து முனையங்கள், மருத்துவ நிலையங்கள், மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

