தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தீவெங்கிலும் உள்ள ஆலயங்களில் பொங்கலுக்கான சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட உள்ளன.

தைத்திருநாளில் வீட்டில் பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம்

1 mins read
563deaf6-1226-423c-9807-f46428063c02
கடந்த ஆண்டு பொங்கலின்போது வீட்டில் பொங்கல் வைக்கும் எத்திராஜன் அரவிந்தன் குடும்பத்தினர். - படம்: கி.ஜனார்த்தனன்

வீட்டில் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தை இந்து அறக்கட்டளை வாரியம், வெள்ளிக்கிழமை தனது சமூகத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) காலை 8.30 மணி முதல் 9.30 மணி, காலை 11.30 முதல் பிற்பகல் 1.30 மணி, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை என மூன்று காலகட்டங்களில் வீட்டில் பாெங்கல் வைக்கலாம் என்ற தகவலை அறக்கட்டளை வாரியம் வெளியிட்டது.

பொங்கலை முன்னிட்டு சிங்கப்பூரிலுள்ள பல்வேறு கோயில்களில் கதிரவனுக்குப் பொங்கல் படைப்பதுடன் சிறப்பு பிரார்த்தனைகளும் நடத்தப்பட உள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் பொங்கல்.
ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் பொங்கல். - படம்: ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்

இவ்வாண்டு திருக்குடமுழுக்கை எதிர்நோக்கும் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில், இந்த முறை பொங்கல் சடங்குகளை விமர்சையாக நடத்தாது என்று கோயில் நிர்வாகம் தமிழ் முரசிடம் தெரிவித்தது. இருந்தபோதும் பக்தர்கள் வந்து பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிர்வாகம் கூறியது.

காலை முதல் நடைபெறும் பொங்கல் சிறப்பு வழிபாடுகளுக்கு கிட்டதட்ட 1,000 பேரின் வருகையை எதிர்பார்ப்பதாக புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தின் செயலாளர் டி தனேந்திரன் தெரிவித்தார்.

வாட்டர்லூ ஸ்திரீட் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் காலை 7.30 மணிக்கு பொங்கல் வைக்கப்படும் என்று ஆலயத்தின் தலைவர் சரோஜினி தேவி சிவராமன் தெரவித்தார்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் காலையில் நடத்தப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்