‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு

‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு

1 mins read
ccb56b6e-51b1-4e18-a8ca-4713b5920d74
இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் ஓராண்டில் ஏறத்தாழ $10,000 பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில் காம்லிங்க் பிளஸ் முன்னேற்றத் தொகுப்புத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

குடும்ப வழிகாட்டியுடன் இணக்கமாக செயல்பட கடப்பாடு வைத்திருக்க உறுதிகொள்ளும் காம்லிங்க் பிளஸ் குடும்பங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை $500 வழங்கப்படும்.

நிலையான வேலைவாய்ப்பு, பாலர் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளின் சீரான வருகையைக் கடைப்பிடிக்கும் இலக்குகளில் உறுதியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் குடும்பங்களுக்கு வழங்குதொகை மேம்படுத்தப்படும்.

குடும்பங்களின் மத்திய சேம நிதிக் (மசேநிதி) கணக்குகளில் தொடர்ந்து பணத்தை ஒதுக்கி வைக்கும் அதே வேளையில், இந்த வழங்குதொகைகள் ரொக்கமாகவும் வழங்கப்படும்.

இந்த மேம்பாடுகளுடன், காம்லிங்க் பிளஸ் திட்டத்தின் கீழ் இருக்கும் இரண்டு பிள்ளைகளைக் கொண்டுள்ள குடும்பங்கள், ரொக்கமாகவும், மசேநிதி வழங்குதொகையாகவும் ஓராண்டில் கிட்டதட்ட $10,000 பெற இயலும்.

குறிப்புச் சொற்கள்