பூமலைச் சின்னங்களைக் கொண்ட நினைவு நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முக்கிய மைல்கல்களைக் பறைசாற்றும் வகையில் மூன்று வெவ்வேறு வடிவமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மூன்று வடிவங்களைக் கொண்ட நாணயங்களை பூமலையுடன் இணைந்து சிங்கப்பூர் நாணய ஆலை வெளியிட்டுள்ளது. தி பேன்ஸ்டாண்ட், சிங்கப்பூர் ஹெர்பேரியம், தேசிய ஆர்க்கிட் தோட்டத்தில் உள்ள புர்கின் மண்டபம் ஆகியவை அந்த மூன்று வடிவமைப்புகள்.
ஒவ்வொரு வடிவமைப்பும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களில் வெளியிடப்படுகின்றன.
யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளப் பட்டியலில் பூமலை சேர்க்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு, தேசிய ஆர்க்கிட் தோட்டத்தின் 30வது ஆண்டு விழா, சிங்கப்பூர் ஹெர்பேரியம் மற்றும் தாவரவியல், தோட்டக்கலையின் 150வது ஆண்டு விழா ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் இந்த நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.
நாணயங்களைத் தனித் தனியாகவோ அல்லது மூன்று நாணயங்களைக் கொண்ட தொகுப்பாகவோ வாங்கலாம்.
சிங்கப்பூர் நாணய ஆலையின் விற்பனை நிலையங்கள் அல்லது www.singaporemint.com எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று நாணயங்களை வாங்கிக்கொள்ளலாம்.