அமைச்சர்கள் ஓங் யி காங், சீ ஹொங் டாட், ஊழியரணித் தலைவர் இங் சீ மெங் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட ஃபேஸ்புக் பயனீட்டாளர் செங் சியா ஹுவாட் வெள்ளிக்கிழமை (மே 16) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அமைச்சர்கள் இருவரும் திரு இங்கும் ஃபூஜியன் குண்டர் கும்பல் உறுப்பினர் சு ஹைஜின்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தவறாகக் கூறும் ஃபேஸ்புக் பதிவையும் ரிச் செங் என்ற பெயரில் சமூக ஊடகத் தளங்களில் வரும் திரு செங் நீக்கினார்.
தவறான பதிவுகளை நீக்கும்படி கோரியதையடுத்து திரு ஒங், திரு சீ, திரு இங் ஆகியோரின் வழக்கறிஞர்களிடமிருந்து மே 15ஆம் தேதி பெற்றதாகவும் அதற்கு இணங்கியதாகவும் திரு செங் இரண்டு புதிய பதிவுகளில் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள், திரு இங் ஆகியோர்மீது கூறிய கருத்துகள் ஆதாரமற்றவை, போலியானவை, அடிப்படையற்றவை என்பதைக் குறிக்கும் மன்னிப்பு கடிதத்தை திரு ஒங், திரு சீ, திரு இங் ஆகியோருக்கு அனுப்பியதையும் திரு செங் பதிவேற்றினார்.
2024ஆம் ஆண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான கள்ள பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்தை எதிர்கொண்ட நபர்களில் ஒருவரான சுவுடன் அமைச்சர்கள் இருவரும் உணவு உட்கொள்ளும் புகைப்படத்தைக் காட்டி சு சட்டத்தை மீறியவர் என்று தெரிந்தும் திரு ஓங்கும் திரு சீயும் அதைப் பொருட்படுத்தவில்லை என்று திரு செங் கூறினார்.
சு பற்றி எதுவும் தெரியாதவர்கள் போல் திரு ஓங்கும் திரு சீயும் நடந்துகொண்டதாகவும் செங் சொன்னார்.
மே 8, 9, 10ஆம் தேதிகளில் திரு இங் பற்றியும் திரு செங் ஃபேஸ்புக்கில் தவறான தகவல்களைப் பதிவிட்டார்.