ஹஜ்ஜுப் பெருநாளில் சமூக உணர்வு; பிரதமர் வோங்குக்கு மனநிறைவு

ஹஜ்ஜுப் பெருநாளில் சமூக உணர்வு; பிரதமர் வோங்குக்கு மனநிறைவு

2 mins read
ba6a44a8-07aa-47ac-a10f-dfad1cbc2d71
ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள 900 சிங்கப்பூர் யாத்திரிகர்களுக்கும் திரு வோங் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். - படம்: மூயிஸ்
multi-img1 of 2

முஸ்லிம்கள் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாளன்று நடத்தப்படும் குர்பான் சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் வெளிப்படுத்திய மீள்திறனையும் சமூக உணர்வையும் கண்டு பிரதமர் லாரன்ஸ் வோங் மனநிறைவு அடைந்துள்ளார்.

இவ்வாண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் மே மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திரு வோங் ஃபேஸ்புக்கில் தமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

“குர்பான் சடங்குக்கான விலங்குகளின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளபோதும் அதன் மூலம் பலனடைவோர் தொடர்ந்து ஆதரவு பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் முயற்சி எடுத்த நமது பள்ளிவாசல்கள், தொண்டூழியர்கள், பங்காளிகள் ஆகிய தரப்பினரின்மேல் நன்றியுடன் இருக்கின்றேன்.

“இந்த முயற்சிகள் நமது சமூகத்தில் இருக்கும் வலுவான பிணைப்புகளை எடுத்துக் காட்டுகின்றன,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவுக்குப் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்டுள்ள 900 சிங்கப்பூர் யாத்திரிகர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

மூத்த அமைச்சர் லி சியன் லூங்கும் புதன்கிழமை வேறு ஃபேஸ்புக் பதிவில் தமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தியாகம், கனிவன்பு, பிறரிடம் அக்கறை காட்டுவது ஆகிய கொள்கைகளை நினைவுகூர ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை வழிவகுப்பதாக அவர் பதிவிட்டார்.

மூத்த அமைச்சர் லீ

சிங்கப்பூரிலிருந்து ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள யாத்திரிகர்கள், மெக்காவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அராஃபாட் பகுதியில் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை (மே 26) கூறியிருந்தார்.

அதிபர் தர்மன்

அதிபர் தர்மன் சண்முகரத்னமும் தமது வாழ்த்துகளை ஃபேஸ்புக்கில் தெரிவித்துக்கொண்டார். அமைதி, கனிவன்பு, நட்பு ஆகிய உணர்வுகளை நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடலாம் என்று திரு தர்மன் பதிவிட்டார்.

சிங்கப்பூரின் ஹஜ்ஜு யாத்திரிகர்களுக்குப் பயணம் பாதுகாப்பான, மனநிறைவான ஒன்றாக அமையவேண்டும் என்று வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹஜ்ஜு எனும் சொல்லுக்குத் தியாகம், அன்பு, அடக்கம் ஆகியவற்றின் மூலம் நமது வாழ்க்கைக்கு அர்த்தம் ஏற்படுத்துகிறது என்ற பொருளும் உள்ளது என்றும் திரு தர்மன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்