ஊழியருக்கு இழப்பீடு வழங்கத் தவறிய நிறுவனத்துக்கு அபராதம்

2 mins read
545c398e-d9c1-4f94-b550-ace32e3ce5b2
வேலை செய்ய முடியாத அளவுக்கு நிரந்தர பாதிப்புக்குள்ளான ஊழியர் எஐஎஸ் குளோபல் ஃபோர்வர்டர்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

வேலையிட காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் வேலை செய்ய முடியாதபடி நிரந்தர பாதிப்புக்குள்ளான ஊழியருக்கு இழப்பீடு வழங்கத் தவறிய நிறுவனத்துக்கு $9,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டுசெல்லும் ‘ஏஐஎஸ் குளோபல் ஃபார்வர்டர்ஸ்’ நிறுவனத்தில் வேலை செய்தார் திரு அப்துல் ஹலிம் மொக்தார்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி டன்னர்ன் சாலைக்கு அருகில் உள்ள ‌ஷெல்ஃபோர்ட் சாலையில் உள்ள கட்டடத்திலிருந்து உடற்பயிற்சிக் கருவியைத் தூக்கும்படி நிறுவனம் திரு அப்துல் ஹலிமிடம் கூறியது.

உடற்பயிற்சிக் கருவியின் கைப்பிடி நெற்றியில் இடித்ததால் காயமடைந்த திரு அப்துல் ஹலிம் வேலை செய்ய முடியாத அளவுக்கு நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டார்.

அவரது காயம், தற்போதைய நிலைமை ஆகியவை குறித்த விவரங்கள் நீதிமன்ற அறிக்கையில் பகிரப்படவில்லை..

திரு அப்துல் ஹலிமின் தலைக் காயத்துக்கான முறையான வேலையிட காப்புறுதியை எஐஎஸ் குளோபல் ஃபோர்வர்டர்ஸ் நிறுவனம் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் பின்னர் தெரியவந்தது.

2023ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் 21 நாள்களுக்குள் திரு அப்துல் ஹலிமுக்கு இழப்பீடு வழங்கும்படி கூறும் இழப்பீட்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.

அந்த அறிக்கையிட்ட தேதியான ஆகஸ்ட் 16 முதல் 21 நாள்களுக்குள் ‘ஏஐஎஸ் குளோபல் ஃபார்வர்டர்ஸ்’ நிறுவனம், விதிகளின்படி திரு அப்துல் ஹலிமுக்கு $98,000க்கும் அதிகமான இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 6க்குள் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க மறுத்த ‘ஏஐஎஸ் குளோபல் ஃபார்வர்டர்ஸ்’ நிறுவனம்மீது கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்