கேலாங் வட்டாரத்தில் பணிப்பெண் ஒருவர் தமது முதலாளியின் உணவங்காடி நிலையக் கடைக்கான உணவைத் தயாரித்துக்கொண்டிருந்தைக் கண்டதாகக் கூறும் வட்டாரவாசி ஒருவர், இது குறித்து தம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அந்தக் கடையைத் தம் அண்டை வீட்டுக்காரர் நடத்தி வருவதாகப் பெயரைக் குறிப்பிடாத அந்நபர், ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் தெரிவித்தார்.
பல்லாண்டுகளாக வீட்டில் உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து வந்ததாகக் கூறிய அவர், தமது அண்டை வீட்டார் உணவு நிலையத்தில் கடை ஒன்று வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
அந்தப் பணிப்பெண், வீட்டுக்கு வெளியே உள்ள பொது நடைபாதையில் வாழைப்பழப் பெட்டிகளைக் கையில் எடுத்து வைத்திருந்ததை அந்நபர் படமெடுத்தார்.
தயாரிக்கப்பட்ட உணவை வீட்டிலிருந்து கடைக்குக் கொண்டு செல்வதற்கும் அந்தப் பணியாளர் உதவி வருவதாக அந்நபர், ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் தெரிவித்தார்.
நடைபாதையில் நடந்து செல்வதற்குக் குறைந்தபட்சமாகத் தேவைப்படும் 1.2 மீட்டர் அகலத்தை அந்தப் பெட்டிகள் சுருக்குவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்நிலை, பல்வேறு விதிமுறைகளை மீறுவதாக தாம் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.
மனிதவள அமைச்சின் விதிமுறைகளின்படி, பணிப்பெண்கள் தங்கள் முதலாளிகளின் வீட்டில்தான் வேலைசெய்யவேண்டும். முதலாளிகளின் கடைகளில் பணிப்பெண்கள் வேலை செய்யக்கூடாது. அத்துடன், முதலாளிகளின் வீட்டில் நடைபெறும் வர்த்தக வேலைகளிலும் பணிப்பெண்கள் ஈடுபடக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தை விசாரித்ததாகத் தெரிவித்த மனிதவள அமைச்சு, முதலாளிக்காக பணிப்பெண் பணியாற்றியது நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்தது.

