தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தரவாதப் பிரச்சினை: கார் விற்பனையாளர்கள் மீதான புகார்கள் அதிகரிப்பு

2 mins read
07cc4501-de76-421b-9658-9b25ececdf00
கார் உரிமையாளர்கள், பராமரிப்புக்காகவும் பழுதுபார்ப்புக்காகவும் கார் வாங்கிய கடையின் அதிகாரபூர்வ பழுதுபார்ப்புக் கடைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உத்தரவாதக் கோரிக்கைகளின் தொடர்பில், சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு, அத்தகைய 11 புகார்கள் செய்யப்பட்டன. 2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை ஏழாகவும், 2021ஆம் ஆண்டில் அது ஆறாகவும் இருந்தது.

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், கார் விற்பனையாளர்கள் உத்தரவாதக் கோரிக்கைகளை மறுப்பதன் தொடர்பில், பயனீட்டாளர் சங்கத்திடம் ஆறு புகார்கள் செய்யப்பட்டன.

வாகன உரிமையாளர்களுக்குத் தங்கள் வாகனங்களை சுயேட்சை அல்லது மூன்றாம் தரப்பு பழுதுபார்ப்புக் கடைகளுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் உத்தரவாதக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று கடந்த பிப்ரவரி மாதம், சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் சங்கம் கார் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அண்மைய புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.

கார் உரிமையாளர்கள் உத்தரவாதத்தைச் செல்லுபடியாக வைத்திருக்க, தங்கள் கார்களைச் பராமரிக்கவோ பழுதுபார்க்கவோ குறிப்பிட்ட விற்பனையாளரின் அதிகாரபூர்வ பழுதுபார்ப்புக் கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்பது அந்தக் கட்டுப்பாடுகளில் ஒன்று.

இவ்வாண்டு உத்தரவாதக் கட்டுப்பாடுகளின் தொடர்பில், ஆணையம் 26 அதிகாரபூர்வ கார் விற்பனையாளர்களை அணுகியது.

கார் விற்பனையாளர்கள் தங்கள் இணையத்தளங்களிலிருந்து அனைத்து உத்தரவாதக் கட்டுப்பாடுகளையும் அது தொடர்பான விவரங்களையும் நீக்கவேண்டும் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

அத்தகைய கட்டுப்பாடுகள் போட்டித்தன்மைச் சட்டத்தின்கீழ் உள்ள விதிகளை மீறக்கூடும் என்று அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அதிகாரபூர்வ விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்படும் புதிய கார்களுக்கு பழுதான பாகங்களுக்கோ, தவறான வேலைப்பாடுகளுக்கோ வழக்கமாக உத்தரவாதம் வழங்கப்படும். அந்த உத்தரவதாம் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்