பீப்பள்ஸ் பார்க் வளாகத்தைப் பாதுகாக்கும் ஆய்வு நிறைவு

1 mins read
f490de2c-79de-410b-8f20-293dc5e02b72
சிங்கப்பூரின் பிரபல கட்டடமான பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தை பாதுகாப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சைனாடவுனில் இன்றும் பிரபலமாக இருக்கும் பீப்பள்ஸ் பார்க் கட்டடத்தின் உறுதித்தன்மையைச் சோதனையிடும் ஆய்வை நகர மறுசீரமைப்பு ஆணையம் நிறைவுசெய்திருக்கிறது.

அந்தக் கட்டடத்தை பாதுகாப்பதற்காக அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவ்வட்டார மறுமேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையே பீப்பள்ஸ் பார்க் கட்டடத்தைப் பாதுகாக்கும் திறனைத் தீர்மானிப்பதில் ஆணையத்தின் மதிப்பீடு வழிகாட்டும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பழமைப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் டான் ஹுவே ஜியுன் தெரிவித்தார்.

பீப்பள்ஸ் பார்க் 31 மாடிகளைக் கொண்டது. முதல் ஆறு மாடிகளில் கடைகளும் அதற்குமேல் 25 மாடிகளில் குடியிருப்பு வீடுகளும் உள்ளன.

முன்னோடிக் கட்டடக் கலைஞரான சிங்கப்பூரரான வில்லியம் லிம், டே கெங் சூன், இன்று டிபி ஆர்க்கிடெக்ட்ஸ் என்று அழைக்கப்படும் முந்தைய டிசைன் பார்ட்னர்ஷிப் ஆர்க்கிடெக்ட்சின் கோ சியாவ் சுவான் ஆகியோரால் பீப்பள்ஸ் பார்க் வடிவமைக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டில் அந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணி நிறைவுபெற்றது.

இந்த வளாகம், இப்பகுதியில் அமைந்த தனியார் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிகம் கலந்த முதல் கட்டடமாகும் என்று திருவாட்டி டான் குறிப்பிட்டார்.

முதன்முதலில் இந்தக் கட்டடம் திறக்கப்பட்டபோது சிங்கப்பூரின் மிகப்பெரிய கடைத்தொகுதியாகவும் இருந்தது.

கடந்த 2018ல் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தை $1.3 பில்லியன் விலைக்குக் கூட்டாக விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எண்பது விழுக்காட்டு உரிமையாளர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அம்முயற்சி தோல்வி அடைந்தது.

குறிப்புச் சொற்கள்