தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடையாள அட்டை எண் மறைத்தல்; நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

2 mins read
e9928078-8fd3-4780-a345-8a6a4f0661af
அடையாள அட்டை எண்களின் ஒரு பகுதியை மறைப்பதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கிட்கிழமையன்று (ஜனவரி 6) கேட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடையாள அட்டை எண்ணை மறைப்பது குறித்து செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) நாடாளுமன்றம் கூடும்போது விவாதிக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, இணையம் மூலம் மருத்துவச் சேவை, மின் சிகரெட்டுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை எண்களின் ஒரு பகுதியை மறைப்பதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கிட்கிழமையன்று (ஜனவரி 6) கேட்டனர்.

அடையாள அட்டை எண்களை மறைக்கத் தேவையில்லை என்ற முடிவு எப்போது எடுக்கப்பட்டது, அடையாள அட்டை எண்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இருந்ததற்காக கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

டிசம்பர் 9ஆம் தேதியன்று ஆணையத்தின் புதிய பிஸ்ஃபைல் இணையவாசல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது அதில் இருக்கும் தேடுதல் அம்சத்தில் இலவசமாகத் தேடிப் பார்த்தபோது பெயர்களும் அடையாள அட்டை எண்களும் காட்டப்பட்டன.

இதுகுறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

முந்தைய நடைமுறையில் அடையாள அட்டை எண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

அடையாள அட்டை எண்கள், முகவரிகள் போன்ற முழு விவரங்களைப் பெற பணம் செலுத்த வேண்டியிருந்தது.

அடையாள அட்டை எண்களை மறைக்கும் நடைமுறையை மாற்ற எண்ணம் கொண்டிருந்ததாக டிசம்பர் 14ஆம் தேதியன்று அரசாங்கம் தெரிவித்தது.

ஆனால் இதுதொடர்பாகப் பொதுமக்களிடம் அறிவிப்பதற்கு முன்பே புதிய பிஸ்ஃபைல் இணையவாசலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக டிசம்பர் 19ஆம் தேதியன்று அரசாங்கம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

இணையம் மூலம் மருத்துவச் சேவை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கிது.

கடந்த ஓராண்டில் இந்த அணுகுமுறையைச் சிலர் தவறான வழியில் பயன்படுத்தினர்.

இணையம் மூலம் மருத்துவச் சேவை வழங்கிய ManaDr மருந்தகம் விதிமீறல்களில் ஈடுபட்டதை அடுத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ManaDr மருந்தகத்துக்காக இணையம் மூலம் மருத்துவச் சேவை வழங்கிய 41 மருத்துவர்கள் விசாரணைக்காக சிங்கப்பூர் மருத்துவச் சங்கத்திடம் அனுப்பிவைக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது.

இணையம் மூலம் மருத்துவச் சேவை வழங்கிய மருந்தங்களில் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக  எத்தனை மருந்தகங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் கேள்வி எழுப்பினார்.

மின் சிகரெட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சிங்கப்பூர் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான அபாயங்கள், வகைப்படுத்துதலைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பட்டது.

மின்சிகரெட்டுகள் தொடர்பாக எழும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்