தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருடிய இத்தாலிய நீச்சல் வீராங்கனைகளுக்கு நிபந்தனையுடனான எச்சரிக்கை

1 mins read
7535638d-ace1-44ca-af0a-d76d46300698
சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் திருடியதற்காக ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட பெனடிட்டா பிலாட்டோ (இடது), சியாரா டரன்டினோ. - படங்கள்: சாவ்பாவ்

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் திருடியதற்காகக் கைது செய்யப்பட்ட இரண்டு இத்தாலிய நீச்சல் வீராங்கனைகளுக்கு 12 மாத நிபந்தனையுடனான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெனடிட்டா பிலாட்டோவும் சியாரா டரன்டினோவும் வேறு எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சிங்கப்பூரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். சம்பந்தப்பட்ட நீச்சல் வீராங்கனைகளுக்கு 20 மற்றும் 22 வயது. திருட்டுக் குற்றத்துக்காக அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்