அதிக வாடகை பெற மூவறை வீடு ஆறு அறை வீடாகிறது

சிங்கப்பூரில் வீட்டு வாடகை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.    

இந்த நிலையில், சொத்து முதலீட்டாளர்கள் அதிக வாடகையை உடனடியாக சம்பாதிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டுரிமை வீட்டில் நடு நடுவே தடுத்து அதிக அறைகளை உருவாக்குகிறார்கள். 

அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ், ஈஸ்ட்பாய்ண்ட் கிரீன், சீமெய் கிரீன் காண்டோ, ரியோ விஸ்டா, ஆர்ச்சர்ட் பார்க் கொண்டோமினியம், தி செய்ல் ஆகியவற்றில் அமைந்துள்ள பல வீடுகள் பலவும் தங்கும் வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக சண்டே டைம்ஸ் தெரிவித்தது. 

எடுத்துக்காட்டாக, சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸில் இருக்கும் ஒரு மூவறை வீட்டில் மேலும் மூன்று படுக்கை அறைகள் சேர்க்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக வாடகைக்கு கொடுக்கப்பட்டு உள்ளன. 

அந்த வீடு 1,173 சதுர அடி பரப்புள்ளது. அது மாதம் சுமார் $4500 வாடகைக்கு முன்பு கொடுக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மேலும் மூன்று அறைகளும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து வீட்டு உரிமையாளர் வாடகையாக மாதம் $8,000க்கும் அதிக தொகையை இப்போது பெறுகிறார். 

பிடோக்கில் கேசாஃபினா புளோக்கில் உள்ள மூவறை வீடு ஆறு அறை வீடாக்கப்பட்டு ஒவ்வோர் அறையும் $1,100 முதல் $1,800 வரை மாத வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!