கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை செப்டம்பரில் கூடியது

கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை செப்டம்பரில் கூடியது

1 mins read
efd273b4-fa73-40d0-a9c6-13f4532d15ce
செப்டம்பரில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.8 விழுக்காடு கூடின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலைகள் செப்டம்பரில் அதிகரித்தன. ‘ஹங்க்ரி கோஸ்ட்’ மாதம் அனுசரிக்கப்பட்ட காலத்தில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்தபோதும் அவற்றின் விலை கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பரில் மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 0.8 விழுக்காடு அதிகரித்தன. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் பதிவான ஒரு விழுக்காட்டு அதிகரிப்பைக் காட்டிலும் அது குறைவு என்று சொத்துச் சந்தை நிறுவனங்களான ‘எஸ்ஆர்எக்ஸ்’ மற்றும் ‘99.co’ தெரிவித்தன.

செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடைந்த ‘ஹங்க்ரி கோஸ்ட்’ மாதத்தில் சந்தை நடவடிக்கைகள் மெதுவடைந்ததும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் கவனத்துடன் செயல்பட்டதுமே விலைகள் குறைந்ததற்குக் காரணம் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறினர்.

இதற்கிடையே, கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை 18.4 விழுக்காடு இறங்கியது. செப்டம்பரில் 738 வீடுகள் கைமாறின. ஆகஸ்ட் மாதத்தில் கைமாறிய 905 வீடுகளைக் காட்டிலும் அது குறைவு.

மத்தியப் பகுதியில் கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் 34 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் முத்திரை வரி விகிதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்