மத்திய கிழக்கு மோதலால் சிங்கப்பூரில் ‘ஹீலியம்’ விலை 40% ஏற்றம்

மத்திய கிழக்கு மோதலால் சிங்கப்பூரில் ‘ஹீலியம்’ விலை 40% ஏற்றம்

1 mins read
b085375f-0f03-498f-84da-702f238b3d62
ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள். - படம்: செரிஷ் எக்ஸ்

சிங்கப்பூரில் கொண்டாட்ட பலூன்களில் நிரப்பப்படும் ஹீலியம் வாயுவின் விலை 40 விழுக்காடு அதிகரித்துவிட்டதாக விழாக்காலப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு மோதல் உலகளாவிய விநியோகத்தைச் சீர்குலைத்து, செலவுகளை அதிகரித்ததன் விளைவாக ஹீலியத்தின் விலையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விலை ஏறினாலும் அதனை வாடிக்கையாளர்கள்மீது சுமத்துவதை விற்பனையாளர்கள் தவிர்த்து வருவதாக சிஎன்ஏ இணையச் செய்தி தெரிவிக்கிறது.

ஹீலியம், பொதுவாக இயற்கை எரிவாயு உற்பத்தியின்போது ஒரு துணைப் பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. அமெரிக்கா, கத்தார் போன்ற நாடுகள் இதன் முக்கிய உற்பத்தியாளர்கள். கத்தார் மட்டும் உலகளாவிய ஹீலிய விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.

ஹீலியம் வாயு நச்சுத்தன்மையற்றது மற்றும் தீப்பற்றாதது என்பதால், பலூன்களில் அதனை நிரப்பலாம். குறிப்பிட்ட பயன்பாடுகளுக்குப் பாதுகாப்பானது என்றாலும், அதனை உறிஞ்சி உள்ளிழுப்பது பாதுகாப்பானது அல்ல.

குறிப்புச் சொற்கள்